அரசுக்கு துணையாக இருக்கவே கவர்னர்கள் ஆசைப்படுகிறோம்; தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

கோவை: கவர்னர்கள் அரசுக்கு துணையாக இருக்கவே ஆசைப்படுகிறோம் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். கோவைக்கு வந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ஆன்லைன் ரம்மி கூடாது என்பதுதான் அனைவரின் நிலைப்பாடும். தெலங்கானாவில் அரசாங்கம் முரண்பாடாக இருக்கிறது. கவர்னர் முரண்பாடு இல்லை. என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கிறது. இது மக்களுக்கு பலன் கொடுப்பதா என பார்த்துவிட்டு கையெழுத்திட வேண்டும்.

இதனை தாமதம் என எடுத்துக்கொள்வதை விட, காலஅவகாசம் என எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள் நலனை அடிப்படையாக வைத்து நான் செயல்பட்டு வருகின்றேன். ஆனால், என்னை புரிந்து கொள்ளாமல் சிலர் விமர்சிக்கின்றனர். மக்களை கவர்னர்கள் சந்திக்கலாம். அப்படி கவர்னர்களை சந்திப்பதால் பல பிரச்னைகள் தீர்ந்துள்ளது. தமிழக கவர்னர் ஒரு மதத்தை சார்ந்து பேசுவதுபோல் தெரியவில்லை.  அரசுக்கு கவர்னர்கள் துணையாக இருக்கவே ஆசைப்படுகிறோம். கவர்னர்களின் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர், என்றார்.

Related Stories: