மேலும் 3 பெண் சிவிங்கி புலிகள் காட்டில் விடுவிப்பு

சியோபூர்: இந்தியாவில் அழிந்துவிட்ட சிவிங்கி புலிகளை மீண்டும் இனப்பெருக்கம் செய்ய ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து 3ஆண், 5 பெண் என 8 சிவிங்கி புலிகள் தனி விமானத்தில் கொண்டுவரப்பட்டன. இவை மத்தியப்பிரதேசத்தின் சியோப்பூரில் உள்ள  குனோ தேசிய உயிரியல் பூங்காவிற்கு கொண்டுசெல்லப்பட்டன. பிரதமர் மோடி தனது பிறந்த நாளான செப்.17ம்  தேதி கூண்டில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இவற்றை திறந்து விட்டார். இந்த சிவிங்கி புலிகள் பூங்காவில் இந்திய சூழலுக்கு பழக்கப்படுத்தப்பட்டன.

இந்திய சுற்றுச்சூழலை ஏற்று வாழ்வதற்கான நிலையை அடைந்ததையடுத்து இவற்றை காட்டில் திறந்துவிட முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 5ம் தேதி எல்டன் மற்றும் ப்ரெட்டி ஆகிய இரண்டு ஆண் சிவிங்கி புலிகள் வனப்பகுதியில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி ஆண் புலி ஒப்பான் திறந்துவிடப்பட்டது. கடந்த ஞாயிறன்று பெண் சிவிங்கி புலிகள் ஆஷா மற்றும் திப்பிலிசி ஆகியனவும் தனிமைப்படுத்தலில் இருந்து காட்டிற்குள் விடப்பட்டன.

இதனை தொடர்ந்து நேற்று பெண் சிவிங்கி புலிகள் சாவனா, சாஷ்ஷா மற்றும் சியாயா ஆகிய மூன்றும் வனப்பகுதிகளுக்குள் திறந்து விடப்பட்டன.

Related Stories: