குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்ஆர்எஸ் கேமரா மூலம் 5,436 பேரிடம் சோதனை: போதையில் வாகன ஓட்டிய 57 பேர் மீது வழக்கு

சென்னை: சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி வந்த 5,436 பேரிடம் எப்ஆர்எஸ் கேமரா மூலம் ஒப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 57 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் குற்றங்களை தடுக்கும் வகையில் கொலை, கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, குடிபோதையில் வாகன ஓட்டி வந்த 57 பேர் மீது வழக்கு பதிவு செய்தும், போக்குவரத்து வீதிகளை மீறியதாக 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வாகன சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமான வகையிலும், குற்றப்பின்னணியில் உள்ள நபர்கள் என மொத்தம் 5,436 பேரை போலீசார், முக அடையாளத்தை கொண்டு பழைய குற்றவாளிகள் அடையாளம் காணும் எப்ஆர்எஸ் கேமரா மூலம் சோதனை நடப்பட்டது. அதில் குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: