நெமிலி சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

நெமிலி: தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இன்று அதிகாலை முதல் நெமிலி, பனப்பாக்கம், பள்ளூர் சேந்தமங்கலம், தக்கோலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடும்பனி கொட்டியது.

எதிரே இருக்கும் பொருட்களை கூட கண்டறியமுடியாத வகையில் கடும் பனிமூட்டமாக காணப்பட்டது. மழை பெய்வதுபோல் காணப்பட்ட பனிமூட்டத்தால் தெருக்கள், நெடுஞ்சாலைகளில் வாகனங்களை சீராக இயக்க முடியவில்லை. அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றது. காலை சுமார் 8 மணி வரை ஏற்பட்ட பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

Related Stories: