துபாயில் கல்ப்கட்ஸ் மிஷன் சார்பில் நடந்த தனிமனித ஊக்குவிப்பு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சி

துபாய்: ஐக்கிய அரபு அமீரக துபாயில் கல்ப்கட்ஸ் மிஷன் சார்பில் நடந்த தனிமனித ஊக்குவிப்பு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சி அமைப்பின் நிறுவரான பிரவீன் ஜோய், தாமோதரன்  மற்றும் கல்ப் கட்ஸ் உறுப்பினர்கள் ஜெயராஜ், ஜெரின், ஹரிஷ், தீபக்  தலைமையில் அமீரகத்தில் உள்ள கேபிடல் பள்ளியின் உள்ளரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் .சிறப்பு கௌரவ விருந்தினராக  அமீரகத்தைசேர்ந்த  கலந்துகொண்டார் மேலும் சிறப்பு விருந்தினர்களாக, ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் யாசின்,  அரவிந்த், குழும நிறுவனங்களின் நிறுவனர் பிரபாகரன் , விபிர் மேனேஜர் ராஜு,பால் பிரபாகர், பிரசாத், அந்தோணி அல்பொன்ஸ், ஜோய் பிராசிஸ், முத்தமிழ் சங்கம் உறுப்பினர்கள், அமீரக தமிழ் சங்கம் தலைவி ஷீலா, பூத்துறை வெல்ஃபேர்  அமைப்பு, மங்கயர் அமீரகம் ப்ரீத்தி, சுமி, கலாட்டா குடும்பம்  உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

மேலும் அறிவோம் தெளிவோம் டாக்டர்  மோனிகா, தினகுரல் தமிழ் தேசிய நாளிதழின் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை  நிருபர் நஜீம் மரிக்கா, லீகல் கன்சல்டன்ட் அர்ஷாத் , அமீரக நண்பன் மகாதேவன்,  கேப்டன் டிவி முதன்மை  நிருபர் கே.வி.எல்.கமால், சமூக சேவகி ஜாஸ்மீன், நளன் உணவகம், கலர் விங்ஸ் பிரின்டிங் , கல்ஃப் கட்ஸ் உறுப்பினர்கள், நண்பர்கள், சமூக வலைதள நண்பர்கள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியை ரம்யா மற்றும் ஜெகநாதன் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் இலவச மருத்துவ முகாம் அல்நூர் பாலிகிளினிக் மற்றும் காஸ்ட் கேர்  டென்டல் கிளினிக் சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் யாதெனின் அடுத்த வருடத்திற்கான குறிக்கோளாக 12 குறும்படம் 3 டெலி பிலிம் எனக் கூறப்படும் ஒரு மணி நேர படங்கள் ஆல்பம் சாங்ஸ் எனும் பாடல்கள் மற்றும் பல பயனுள்ள தகவல்களை தங்களுடைய வலையொலியில் வெளியிடுவதாக கூறினர் அது மட்டும் இன்றி மக்கள் நலன் கருதி சமூக சேவை செய்யும் நோக்கத்தில் வேலை வாய்ப்புக்கு உதவுவது கஷ்டப்படும் தமிழர்களுக்கு உணவு, உறைவிடம் அளிப்பது போன்ற தேவைகளை செய்யவும் இங்கு உள்ள அமீரகவாழ் தமிழர்களின் திறமைகளை வெளிக்கொணர தளம் அமைப்பதாகவும் பல வாய்ப்புகள் அமைத்து தருவதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ஆதரவு வழங்கிய பங்குதாரர்கள், சிறப்பு விருந்தினர்கள், தனித்திறனாளர்கள், ஆரோக்கியதாஸ், கீழக்கரை பாகிம், டிக்டாக் சாமியுக்ஷா, கவின், உள்ளிட்டோர்  அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஊடகம் என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல ஊடகம் எனும் பெரும் கருவியை வைத்து மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு முன் உதாரணமாக முதற்படி எடுத்து வைத்துள்ளனர் அவர்கள் சேவை மென்மேலும் வளர பல தரப்பினரும் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் கல்ப்கட்ஸ் நிறுவனரான பிரவீனின் உழைப்பு, நாணயம், அனைவரிடமும் அரவணைத்து பழகும் பண்பு ஆகியவற்றை எடுத்துக்கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: