மயானத்தில் பலியிட்ட பன்றிகள், மண்டை ஓடுகள்-பொதுமக்கள் அச்சம், தடுத்து நிறுத்த கோரிக்கை

குளித்தலை : குளித்தலை பெரியார் பாலம் காவிரி ஆற்று மயான கொட்டகையில் பலியிட்ட பன்றிகள், மண்டை ஓடுகள் கிடப்பதால் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற மந்திர செயல்களில் ஈடுபடுவோரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதியில் மணத்தட்டை சுங்ககேட் பெரியார் பாலம் காவிரி ஆறு கடம்பன் துறை ஹை ஸ்கூல் துறை பெரிய பாலம் பரிசல் துறை ஆகிய பகுதிகளில் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கும், எரியூட்டுவதற்கும் மயானம் கொட்டகை அமைந்துள்ளது.

இதனால் அந்தந்த பகுதியில் இறந்தவர்கள் உடலை பொதுமக்கள் உறவினர்கள் அடக்கம் செய்வதற்கோ, எரியூட்டுவதற்கோ பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் குளித்தலை சுங்ககேட் பெரியார் பாலம் காவிரி கரை ஓரம் உள்ள மயான கொட்டகை சுற்று வட்டார பகுதியில் இருந்து கிராம மக்கள் இறந்தவர்கள் உடல்களை அடக்கம் மற்றும் எரியூட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால், அதிக பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்து வருகிறது. இதனால் இறந்தவர்கள் உடலை கொண்டு வரும்போது மட்டுமே இப்பகுதியில் பொதுமக்கள் உறவினர்கள் கூட்டம் காணப்படும்.இந்நிலையில் சமீப காலமாக மந்திரம் மாந்திரீகம் செய்யும் மர்ம நபர்கள் இந்த சுங்க கேட் பெரியார் பாலம் மயான கொட்டகை பகுதியில் இரவு நேரங்களில் தங்களுடைய மாந்திரீக செயல்களை செய்து வருவது வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு இந்த மயான கொட்டகை பகுதியில் மண்டை ஓடுகள் உள்ளது. பன்றிகள் தலை துண்டித்த நிலையில் ரத்தம் பரவலாக உள்ளது மாதிரியான செயல் இதுவரை இதுபோன்று யாரும் செய்ததில்லை எனவும், பொதுமக்கள் பொதுவாக பயன்படுத்தும் மயான கொட்டகையில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மந்திரவாதிகளை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மண்டை ஓடுகள் வைத்து மந்திரம் மாந்திரீகம் செய்திருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் ஆடு, மாடுகளை மேய்க்க செல்லும் போது மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. எந்நேரமும் மக்கள் குளிக்க செல்லும் பாதையில், இது போன்ற தவறான செயல்களால் அப்பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.

குறிப்பாக, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கு தினந்தோறும் மூன்று வேலைகள் அபிஷேகம் செய்வதற்கும் காவிரி நதிநீர் தீர்த்த குடம் இப்பகுதியில் இருந்து தான் எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற புனித செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் தவறான செயல்கள் நடைபெற்று வருகிறது.

இதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் கேமராக்களை பொருத்த வேண்டும். வரும் காலங்களில் இது போன்று நள்ளிரவு நேரத்தில் செயல்களில் ஈடுபடும் மந்திரவாதிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: