கே.எல்.ராகுல்-அதியா ஜனவரியில் திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க வீரர் கே.எல்.ராகுல். 30 வயதான இவர், இந்திய அணிக்காக இதுவரை 43 டெஸ்ட், 45 ஒன்டே மற்றும் 72 டி.20 போட்டிகளில் உள்ளார். இவர் பிரபல நடிகர் சுனில்ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியாஷெட்டி(30) காதலித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் ஜனவரியில் நடைபெற உள்ளது. இதனை உறுதிபடுத்தி உள்ள சுனில் ஷெட்டி, திருமண தேதி மற்றும் இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: