நெடுஞ்சாலைத் துறையில் அலகு வாரியாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: நெடுஞ்சாலைத் துறையில் அலகு வாரியாக அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். 1843ஆம் வருடம் நவம்பர் 27ம் தேதி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட “சுலோச்சன முதலியார் பாலம்” திறக்கப்பட்டு இன்று 179வது ஆண்டை கொண்டாடுகிறது. 1970ல் முசிறி – குளித்தலை இடையே முத்தமிழறிஞர் கட்டப்பட்ட தந்தை பெரியார் பாலம் தான் தமிழகத்திலேயே நீளமான ஆற்றுப்பாலம். இதன் நீளம் 1470 மீட்டர். கட்டுமான பணி நடைபெறுவதாக 129 பணிகளும், நில எடுப்பு 9 பணிகள், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு 56 பணிகள் கட்டுமானத்திற்கு முந்தைய நிலை 130 பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தின் போது, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தலைமை பொறியாளர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கினார்கள்.

நெடுஞ்சாலை துறையில் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலை இந்த இரண்டு அலகுகளும் கட்டுமானப்பணிகளுடன், பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. சிறப்பு திட்ட அலகுகளுக்கு பராமரிப்பு பணிகள் ஏதும் கிடையாது. இந்த அலகுகளில் பணிபுரியும் பொறியாளர்கள் முழுக்க முழுக்க திட்டப் பணிகளை மட்டும் மேற்கொள்கிறார்கள். ஒரு சாலையை முழுமையான மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் பொழுது உரிய திட்டமிடுதல் வேண்டும். குறைந்த மூலதனத்தில், மக்களுக்கு பயன் அளிக்கும் விதத்தில் பணிகளை திட்டமிடுதல் பொறியாளர்களின் தலையாய கடமை. இடர்பாடுகள் மற்றும் தடங்கல்கள் ஆகியவற்றை எதிர்நோக்கி காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

திட்டமிடுதலில் புது புது உத்திகள் கடைப்பிடித்து இலக்கிட்டை நிர்ணயிக்க வேண்டும். அதற்கு முறையான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய சாலை காங்கிரஸ் (IRC) மற்றும் நெடுஞ்சாலைத்துறை வகுத்துள்ள விதிமுறைகளின் படி வடிவமைப்பு செய்யப்பட வேண்டும். பாலப் பணிகள் முறையான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட வேண்டும். உரிய காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பு பணிகள், சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்கள், மின்சார வாரிய உபகரணங்கள் மாற்றியமைத்தல் மற்றும் மரங்களை அகற்றுதல் ஆகியவற்றை உரிய திட்டமிடுதலுடன் மேற்கொண்டு பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைய அனைத்து வித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பணிகள் திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டால் தான், திட்டத்தின் பயன்கள் பொதுமக்களுக்கு உடனடியாக சென்றடையும். பெரிய பாலப்பணிகள் நவீன உத்திகளை கடைப்பிடித்து கட்டுமானம் மேற்கொண்டால் குறுகிய காலத்தில் பணிகளை முடிக்க சாத்தியமாகும். சாலைகள் அமைக்கும் பணிகளில் வெள்ள நீர்மட்டத்திற்கு ஒரு மீட்டர் மேல் அடித்தளம் அமையும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இரயில்வே மேம்பாலப் பணிகளில் இரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இரு துறைகளும் ஒரே நேரத்தில் பணிகளை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு உரியகாலத்தில் முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும். ஒருங்கிணைந்து பணியாற்றுவதால் என்பது இரு துறைகளுக்கும் இடையில் கடிதங்களை பரிமாறிக் கொள்ளுதல் அல்ல.

அவ்வப்போது கலந்தாலோசித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல். நகர்ப்புற பகுதிகளில் வடிகால்கள் அமைக்கும் பொழுது முறையான வாட்டத்துடன் அமைக்கப்பட வேண்டும். இருபுறங்களிலும் உள்ள குடியிருப்புகளை பாதிக்காத வண்ணம் வடிகாலின் மேல் மட்டம் அமைக்கப்பட வேண்டும். விதிமுறைகளின் படி முறையான தரக்கட்டுப்பாடு சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சாலை மட்டங்கள் முறையாக அமைக்கப்படுகின்றதா? என்பதை பரிசோதிக்க வேண்டும். ஆலோசனை நிறுவனங்கள் மூலமாக பணி மேற்பார்வை மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளிலும் துறை பொறியாளர்கள் மூலமாக முறையாக பணிகள் பார்வையிடப்பட வேண்டும். பணிகளை செயல்படுத்தும்போது, குறிப்பாக சாலையை அகலப்படுத்தும் பணிகள், பாலங்கள் கட்டும் பணிகளில் உரிய பணியிட பாதுகாப்பு (WORK ZONE SAFETY) முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகர்ப்புறங்களில் மேம்பாலம் கட்டும் பணிகளை பொதுமக்களின் போக்குவரத்திற்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். தரக் கட்டுப்பாடு சோதனைகள் விதிமுறைகளின் படி மேற்கொண்டு உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும். பணிகளின் அளவீடுகளும் அளவு புத்தகங்களில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட வேண்டும். இவற்றை உயர் பொறியாளர்கள் ஆய்வின் போது பரிசோதிக்க வேண்டும். பொறியாளர்கள் ஆய்வின்போது பார்வையிட வேண்டியவற்றை ஒரு CHECK LIST வடிவில் பதிவு செய்ய வேண்டும். திட்டப்பணிகள் உடனடியாக திட்டமிட்ட காலக் கெடுவிற்குள் முடிக்கப்பட்டால்தான், அடுத்தடுத்த திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

Related Stories: