வதிலையை வாழவைக்கும் வாழை... அரசு குளிர்சாதன கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு பகுதியில் வாழைகளுக்கென அரசு குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு பகுதியில் தற்போது அதிகம் விவசாயம் செய்வதில் வாழை விவசாயம் முதலிடத்தில் உள்ளது.வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு, கணவாய்ப்பட்டி, ஜி.தும்மலப்பட்டி, கோம்பை பட்டி, விருவீடு உள்பட பல்வேறு ஊர்களில் வாழை விவசாயம் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதியில் வைகையாறு, மஞ்சளாறு, மருதாநதி ஆகியவை பாய்வதாலும் வீரங்குளம், கன்னிமார் சமுத்திரம்,ரங்கசமுத்திரம்உள்பட பத்துக்கு மேற்பட்ட கண்மாய்கள்இருப்பதால் தண்ணீர் போதுமான அளவு தண்ணீர் வாழை விவசாயத்துக்கு கிடைத்து வருகிறது.

வாழையில் வாழைத்தார் ஆண்டுக்கு ஒரு முறை வந்தாலும் வாழை இலை வருடமெல்லாம் பலன் கொடுக்கிறது. வாழை இலை 15 நாளைக்கு ஒருமுறை அறுப்பதால்வ ருமானம் வந்து கொண்டே இருக்கிறது.எனவே நெல்லை விட அதிக அளவில் வாழை விவசாயம் செய்துள்ளார்கள். வாழையில் செவ்வாழை, ரஸ்தாலி, நாடு, பூவன், கற்பூரவள்ளி என்று பலவகை உள்ளது.அதில் செவ்வாழை, ரஸ்தாலிபோன்ற வாழைக்காய்க்குநல்ல விலை கிடைக்கிறது.

வாழை விவசாயம்அறிந்த விவசாய தொழிலாளர்கள் இப்பகுதியில் அதிக அளவில் இருப்பதால் மற்ற பகுதியை காட்டிலும் இங்கு வாழை நன்கு விளைகிறது. மேலும் வத்தலக்குண்டுவில் வாழைக்காய் விற்பதற்கு இரண்டு பெரிய சந்தைகள் உள்ளன. வாழைக்க்காயை வாங்க சென்னை, கோவைபோன்ற பெருநகரங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வத்தலக்குண்டு வருகின்றனர். அதேபோல வாழை இலையை விற்பதற்கும் இரண்டு பெரிய சந்தையில் உள்ளன.

ஆகையால் விவசாயிகள் வாழைக்காய்களையும், வாழை இலையையும் சிரம மின்றி விற்/று வாழைக்காய் கொண்டு வந்த வாகனத்தில் திரும்பும் போது தேவையான உரங்களை வாங்கி ஏற்றிச்செல்கின்றனர்.வாழை விவசாயிகளுக்கு இங்கு பல்வேறு வசதிகள் இருந்தாலும் விலை வீழ்ச்சியடையும் போது வைத்து விற்க அரசு குளிர்சாதன கிடங்கு இல்லை.

இதனால் வாழை விவசாயிகள் வந்த விலைக்கு விட்டுச் செல்லும் நிலை இருக்கிறது. சமயத்தில் தக்காளி போன்ற காய்கறிகள் விலையானது படு பாதாளத்தில் விழும்போது விவசாயிகள் எரிச்சலில் தக்காளி போன்ற காய்கறிகளை குப்பையில் கொட்டும் நிலை ஏற்படுகிறது.எனவேவிலை வீழ்ச்சியின் போதுவைத்து விற்கஅரசு குளிர்சாதன கிடங்கு அவசியம் தேவைப்படுகிறது. எனவே வத்தலக்குண்டு பகுதியில் அரசு குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: