பனிமூட்டம், சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊட்டி :  நீலகிரி  மாவட்டத்தில் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை  துவங்கியது. ஒரிரு நாட்கள் கனமழை பெய்த நிலையில் அதன் பின் மழை குறைந்து  மேகமூட்டம் மற்றும் வெயிலான காலநிலை நிலவி வந்தது. அவ்வப்போது ஒரிரு  நாட்கள் மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக  பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. நேற்று முன்தினம் இரவு  மூலம் கடுமையான பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவிய நிலையில், நேற்று  அதிகாலை முதல் ஊட்டி, எல்லநள்ளி, கேத்தி பாலாடா, மஞ்சூர் உள்ளிட்ட  பகுதிகளில் பனிமூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்தது.

மழை காரணமாக  ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் நகரில் மக்கள் நடமாட்டம்  குறைவாகவே காணப்பட்டது. நடமாடிய ஒரு சிலரும் பனியன், ஜர்க்கின், குல்லா  போன்ற வெம்மை ஆடைகள் அணிந்தப்படியே கையில் குடை சென்றனர்.  வழக்கமாக சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் ஊட்டியில் உள்ள சுற்றுலா  தளங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமான அளவிற்கு காணப்படும்.

நேற்று  பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்த நிலையில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா  உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.  படகு இல்லத்தில் மிக குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே படகு சவாரி  செய்தனர். நேற்று காலை முதல் கடுமையான பனிமூட்டத்துடன் மழை பெய்து  வருவதால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. ஊட்டி - குன்னூர், மஞ்சூர் சாலை மற்றும் ஊட்டி நகரில் பயணித்த வாகன ஓட்டிகள் முகப்பு  விளக்குகளை ஒளிரவிட்டபடியே மிகவும் மெதுவாக சென்றனர்.

Related Stories: