ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறப்பு முகாமில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியர்களுக்கு பேட்டியளித்த அவர், எவ்வளவு பேர் வாடகை வீடுகளில் குடியிருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை. மின் இணைப்பு பெற்றவர்களில் எத்தனை பேர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்ற விவரமும் அரசிடம் இல்லை. 2.33 கோடி பேரில் இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள். நட்டத்தில் இயங்கும் மின் வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்று கூறினார்.

டிசம்பர் 31 வரை ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறும். ஆதார் எண்ணை இணைத்தாலும் தற்போது உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இலவச மின்சாரம் ரத்தாகும் என பரவும் தகவல் தவறானது. சிறப்பு முகாமுக்கு வருவோர் மின் இணைப்பில் தரப்பட்டுள்ள செல்போன் எண்ணுடன் வந்தால் எளிதாக ஆதாரை இணைக்கலாம். விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகளை வைத்திருப்பவர்களும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Related Stories: