அதிவேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு எதிராக வழக்கு: 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிவேகமாக வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை திருத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விக்னேஷ் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதியின்றி இருசக்கர வாகனத்தை மாற்றி அமைத்து பயன்படுத்துவதை தடுக்க மற்றும் இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவது அதிகரித்து வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: