தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு செய்ய வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!!

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பாக செய்தியர்களை சந்தித்த அன்புமணி, நீர் மேலாண்மை திட்டத்திற்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டால் தான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை ஏற்படாது என்றார். கொள்ளிடம் ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்டினால், கடலில் வீணாக கலக்கும் காவிரி உபரி நீரில் 50 பி.எம்.சி.யை சேமிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலை வாய்ப்பை தமிழர்களுக்கே அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி 100 விழுக்காடு இடங்களையும் அனைத்து சமூகங்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். கஞ்சா, குட்கா புழக்கத்தை கட்டுப்படுத்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில், 20 ஆயிரம் போலீசாரை கூடுதலாக பணியமர்த்தி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.

Related Stories: