சென்னையில் டெலிவரி பாயிடம் ரூ.2000 கொடுத்ததால் வீட்டில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

சென்னை: சென்னையில் டெலிவரி பாயிடம் ரூ.2000 கொடுத்ததால் வீட்டில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாம்பலத்தில் டெலிவரி பாயிடம் ரூ.700 க்கான உணவுக்கு ரூ.2000 கொடுத்து மூவர் மீதி தொகையை பெற்றுள்ளனர். ரூ.2000 நோட்டு ஏடிம்யில் செலுத்தியபோது திருப்பி வந்ததால் டெலிவரி பாய் ரோந்து காவலரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவலர் நடத்திய சோதனையில் வீட்டிலிருந்து 1 கிலோ கஞ்சா, எடை இயந்திரம், 2 செல்போன் பறிமுதல் செய்துள்ளனர். 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: