அதிமுக பேச்சாளர் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: அதிமுக மூத்த பேச்சாளரும், வட சென்னை மாவட்டக் கழக அவைத் தலைவருமான மா.சா. எத்திராசன் உடல்நலக் குறைவால் உயிரிழப்புக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது, கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும், மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால அதிமுக உறுப்பினர் மா.சா. எத்திராசன், சிறந்த தலைமைக் கழகப் பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளையும், சாதனைகளையும், சிறப்பான முறையில் எடுத்துரைத்தவர். கழகப் பணிகளையும் தீவிரமாக ஆற்றியவர். அன்புச் சகோதரர் எத்திராசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ஆறுதலை தெரிவித்து கொளகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: