திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அமைப்பாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டுள்ளது இந்த அணியின் செயலாளராக  தயாநிதி மாறன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

 திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

திமுக சட்டதிட்டத்தில், திமுக துணை  அமைப்புகள்,  சார்பு மன்றங்கள் தலைப்பிலான விதியின்படி அமைப்புசாரா  ஓட்டுநர்களின் நலன்  கருதி, தி.மு.க. அமைப்பு சாரா  ஓட்டுநர் அணி எனும் புதிய  துணை அமைப்பும்; தமிழகத்தில்  உள்ள விளையாட்டு துறையை மேம்படுத்திட திமுக விளையாட்டு  மேம்பாட்டு அணி என்ற புதிய  இரு அணிகள்  உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டு  மேம்பாட்டு அணிச் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி நியமிக்கப்படுகிறார்.

விளையாட்டு மேம்பாட்டு  அணித் துணைச் செயலாளர்களாக கவுதம சிகாமணி எம்.பி, எஸ்.ஆர்.பார்த்திபன்  எம்.பி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, பைந்தமிழ் பாரி, வே.நம்பி ஆகியோரும் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு துரைமுருகன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்களை நியமித்தும் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு   உறுப்பினர்களாக தலைவர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்.பி., உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து தயாநிதி மாறன் எம்.பி. நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார்.

Related Stories: