திமுக நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: திமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட  அணிகளின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், புதியதாக நியமிக்கப்பட்ட திமுக மாணவர் அணி மற்றும் திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது  துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: