மாநகராட்சி பூங்கா அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற பிரபல கொள்ளையன் கைது

சென்னை: சென்னை மாநகராட்சி பூங்கா அருகே ஆட்ேடாவில் கஞ்சா விற்பனை செய்து வந்த வழிப்பறி கொள்ளையன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.2 கிலோ கஞ்சா, 3 கத்திகள், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விருகம்பாக்கம் மற்றும் சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே ரகசியமாக ஆட்டோவில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் யாருக்கும் சந்தேகம் வராதபடி ஆட்டோவில் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் புகழேந்தி தெருவை சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் செல்வராஜ் (25), தனது நண்பர் ராயப்பேட்டை அய்யாவு தெருவை சேர்ந்த கணேஷ் (29) என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. செல்வா மீது விருகம்பாக்கம், வளசரவாக்கம், கே.ேக.நகர், அயனாவரம், அம்பத்தூர், மதுரவாயல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி என 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் செல்வராஜ் மற்றும் கணேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.2 கிலோ கஞ்சா, 3 செல்ேபான்கள், 3 கத்திகள், கஞ்சா விற்க பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: