பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசன்ட் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா; புவி அறிவியல் அமைச்சக செயலர் பங்கேற்பு

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா எதிரே உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசன்ட் இன்ஸ்டடிடிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், கல்லூரி வேந்தர் பி.எஸ்.ஏ.ஆரிப் புகாரி ரஹ்மான் தலைமை வகித்தார். இணை வேந்தர் அப்துல் காதர் ரஹ்மான் புகாரி, துணை வேந்தர் டாக்டர் ஏ.பீர்முகமது, பதிவாளர் டாக்டர் என்.ராஜாஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கலந்துகொண்டு 578 பட்டதாரிகளுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் 44 பிஎச்டி, 51 முதுகலை மற்றும் 1795 இளங்கலை உட்பட மொத்தம் 2340 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். தரவரிசையில் இடம்பெற்றதற்காக 51 மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.

இதில் 33 மாணவர்கள் இளங்கலை மற்றும் 18 மாணவர்கள் முதுகலை படித்தவர்கள் ஆவர். நிகழ்ச்சியில், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் பேசியதாவது:

நாம் ஒரு கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத் தலைவராக, பாதையை கண்டுபிடிப்பவர்களாக இருக்க வேண்டும், பின்பற்றுபவர்களாக இருக்கக்கூடாது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் யோசனைகளை வெளிக்கொண்டுவர நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆற்றலுடனும், அர்ப்பணிப்புடனும் பங்களித்தால் மட்டுமே சாத்தியமாகும். புதுமையால் மட்டுமே உற்பத்தித் திறனை உயர்த்த முடியும். அதன் மூலம்  நாட்டின் ஜிடிபியும் உயரும். இயற்கை சூழல் மாற்றத்தால் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் கடல் ஆழத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரூ.4070 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: