புதுவையில் ரூ.900 கோடிக்கு விடப்பட்ட குப்பை; அள்ளும் டெண்டரில் ஊழல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுவையில் ரூ.900 கோடிக்கு விடப்பட்ட குப்பை அள்ளும் டெண்டரில் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து பகிரங்க நீதிவிசாரணைக்கு முதல்வர் தயாரா? என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில் குப்பை அள்ளி தரம்பிரிக்க 19 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனத்துக்கு ெடண்டர் கோரப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 4ம் தேதி டெண்டர் திறக்கப்படவுள்ளது. ரூ.900 கோடிக்கு விடப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளது.

இதுசம்பந்தமாக ஆளும் பாஜ அமைச்சர் சாய் சரவணன்குமார் தலைமை செயலருக்கு புகார் அளித்துள்ளார். நான் ஏற்கனவே குப்பை டெண்டரில் ஊழல் நடந்திருப்பதாக கூறியிருந்தேன். அதனை துறையின் அமைச்சரே ஏற்றுக்கொண்டு இருக்கிறார். ஊழல் என்று சொன்னால் பாஜ உடனடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கும் என்ற சொன்ன பாஜ மாநில தலைவர் சாமிநாதன் என்ன செய்யப்போகிறார். முதல்வர் உத்தரவு இல்லாமல் இந்த டெண்டர் விட்டு இருக்க முடியாது. இதுசம்பந்தமாக பகிரங்க நீதி விசாரணைக்கு முதல்வர் தயாரா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: