இசை அமைப்பாளரானார் கருணாஸ் மகன்

சென்னை: பாடகராக இருந்து நடிகரானவர், கருணாஸ். அவரது மகன், கென் கருணாஸ். ‘இது காதல் வரும் பருவம்’, ‘அழகு குட்டி செல்லம்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அவர், ‘அசுரன்’ படத்தில் தனுஷ் மகனாக நடித்தார். தற்போது அவர் இசை அமைப்பாளராகி இருக்கிறார். கருணாஸ், கரிகாலன் இணைந்து தயாரித்து இருக்கும் படம், ‘சல்லியர்கள்’. இதை ‘மேதகு’ படத்தை இயக்கி இருந்த கிட்டு இயக்கி இருக்கிறார். சத்யா தேவி, கருணாஸ், திருமுருகன், மகேந்திரன் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கென் கருணாஸ், அவருடைய நண்பர் ஈஸ்வர் இணைந்து இசை அமைத்துள்ளனர். இதுகுறித்து கென் கருணாஸ் கூறுகையில், ‘இப்படத்தின் மெயின் இசை அமைப்பாளர், எனது நண்பன் ஈஸ்வர்.

நான் அவருக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றியுள்ளேன். முதலில் கதையை உள்வாங்கி இசை அமைக்க தொடங்கினோம். தொடர்ந்து இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் பணியாற்ற திட்டமிட்டுள்ளோம்’ என்றார். கருணாஸ் கூறுகையில், ‘இந்தப் படத்தில் கென்னுடைய நண்பர் ஈஸ்வர்என்பவரை இசை அமைப்பாளராக நான் அறிமுகம் செய்கிறேன். எனது மகனும் அவருடன் இணைந்து இசை அமைத்துள்ளார் என்றாலும், அவர் ஒரு நல்ல நடிகனாக வர வேண்டும் என்பதே என் ஆசை. இனிவரும் நாட்களில் எல்லாவிததகுதிகளையும் வளர்த்துக்கொண்டால், அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும்’ என்றார்.

Related Stories: