பொங்கலுக்கு திரைக்கு வருகிறது பாலகிருஷ்ணா படம்

ஐதராபாத்: தெலுங்கில் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ் ணா நடிக்கும் படம், ‘வீர சிம்ஹா ரெட்டி’. இதில் தமன் இசையில் வெளியான ‘ஜெய் பாலையா’ பாடல், பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. ராம ஜோகையா சாஸ்திரி பாடல் எழுத, கரீமுல்லா பாடியுள்ளார். இதில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். முக்கிய கேரக்டர்களில் துனியா விஜய், வரலட்சுமி நடிக்கின்றனர்.

ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் தயாரிக்கின்றனர். வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று இப்படம் திரைக்கு வருகிறது. தெலுங்கில் நேரடியாக வெளியாகும் இப்படம், தமிழ் உள்பட மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: