அஜித் படத்துக்கு பாடினார் மஞ்சு வாரியர்

சென்னை: போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்திருந்த அஜித் குமார், தற்போது 3வது முறையாக அவர்களுடன் இணைந்துள்ள படம், ‘துணிவு’. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகையும், தமிழில் ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ேஜாடியாக நடித்திருந்தவருமான மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துள்ளார். வரும் பொங்கலன்று திரைக்கு வரும் இப்படத்தின் தமிழக உரிமையை, ரெட் ெஜயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கியுள்ளார்.

வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாகும்  ‘துணிவு’ பட ஷூட்டிங் விரைவில் முடிவடைகிறது. இந்நிலையில், ஜிப்ரான் இசையில் மஞ்சு வாரியர் ஒரு பாடல் பாடியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அஜித் குமாரின் ‘துணிவு’ படத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பாடலில் நானும் இணைந்து பாடியது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பாடலை ரசிகர்கள் அனைவரும்  கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார். இதையடுத்து சமுத்திரக்கனி தனது சமூக வலைத்தளத்தில், ‘துணிவு, பர பரப்பாக...’ என்று கேப்ஷனிட்டு சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Related Stories: