காலிப்பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்: சங்க நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: தமிழக அரசில் உள்ள அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட  டி பிரிவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஆர்.சசிகுமார் தலைமையில் நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் தமிழக அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். தமிழக அரசில் உள்ள அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அலுலக உதவியாளர்கள், இரவு காவலர், துப்புரவு பணியாளர், மருத்துவமனை பணியாளர்கள், விடுதி பணியாளர்கள் போன்ற அனைத்து டி பிரிவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சரண் விடுப்பை வழக்கம் போல் வழங்க வேண்டும்’’ உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

Related Stories: