மோடி அரசின் தவறான கொள்கையால் இந்திய பொருளாதாரம் 2% குறைந்துள்ளது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: மோடி அரசின் தவறான கொள்கையால் இந்தியாவின் பொருளாதாரம் 2 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் அணி சார்பாக சென்னை மண்டல பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிருபர்களிடம் கே.எஸ் அழகிரி கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் 9.9% இருந்த இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சி; தற்போது மோடி அரசின் தவறான கொள்கையால் 2% குறைந்து 7% ஆக உள்ளது. பிரதமர் மோடி தவறான பிரசாரங்களை மேற்கொண்டு தன்னை முன்னிறுத்திக் கொள்கிறாரே தவிர இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சியை அடையவில்லை.

அதேபோல், ஒருபக்கம் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் ஏன் தொழில்கள் முடங்கி கிடக்கிறது. மறுபக்கம் விவசாயிகள் விளை பொருள்களுக்கு சரியான விலை இல்லாமல் சிரமப்படுகிறார்கள் இதற்கெல்லாம் முக்கிய காரணம் தவறான பொருளாதார வீழ்ச்சி தான். குஜராத் தேர்தலுக்காக பல இலவசங்களை அறிவித்துவிட்டு பின்பு இலவசங்கள் பற்றி பேசுவது என்பது தவறானது. குடியுரிமை சட்டம் மக்களுக்கு எதிரானது என்பதை அறிந்து  தமிழக அரசு அதற்கு எதிராக சட்டம் நிறைவேற்றி இருக்கிறது. எனவே, குடியுரிமை சட்டம் என்பது மக்கள் மத்தியில் வெற்றி பெறாது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: