ராயபுரம் மேற்கு பகுதி திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: 180 பேருக்கு அரிசி மூட்டைகள்

தண்டையார்பேட்டை: திமுக இளைஞரணி செயலாளராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ராயபுரம் மேற்கு பகுதி திமுக சார்பில், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு ராயபுரம் மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ் தலைமை வகித்தார். ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலாநிதி வீராசாமி எம்பி, மாவட்ட செயலாளர் இளையஅருணா, ஜே.ஜே.எபினேசர். ஆர்.டி.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டு கேக் வெட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.  திமுக நிர்வாகிகள் 180 பேருக்கு 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்டது. மேலும் விழாவில், பெண்கள் 100 பேருக்கு புடவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கீதா சுரேஷ், வேளாங்கன்னி, பகுதி துணை செயலாளர் ரமேஷ், வட்டச் செயலாளர்கள் பாலன், கவுரிஸ்வரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கி கலாநிதி வீராசாமி எம்பி பேசும்போது, ‘’இரண்டாவது முறையாக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்ததற்கு தலைவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக செயலாற்றுகிறார். அவருக்கு அடுத்ததாக அமைச்சரவையில் தலைவர் இடம் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். சென்னையில் தற்போது பெய்த மழையில் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. அதற்கு காரணம் முதல்வரின் திட்டம்தான்’ என்றார்.

Related Stories: