சிங்கப்பூர் செல்ல பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது: 48 பவுன் நகைகள் மீட்பு

திருச்சி: சிங்கப்பூர் செல்ல பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது  செய்யப்பட்டார்.  திருச்சி கோரிமேடு, கருமண்டபம், கே.கே.நகரில் உள்ள நேரு தெரு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த புகாரின்பேரில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் கடந்த 2 மாதம காலமாக பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன்(26) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், மணிகண்டன் சிங்கப்பூர் செல்ல இருந்ததாகவும், அதற்கு பயணச் செலவுக்கு தன்னிடம் பணமில்லாததால் நகை திருட்டில் ஈடுபட்டதாகவும் ஒப்புக்கொண்டார். மணிகண்டனிடம் இருந்து 48 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.  இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: