டீசல் இல்லாமல் நின்ற ஆம்புலன்ஸ்; நோயாளி சாவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள தனாப்பூர் கிராமத்தை சேர்ந்த 40 வயது நபருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே ஆம்புலன்சில் டீசல் இல்லாமல் நின்றது. இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள், ஆம்புலன்சில் இருந்து இறங்கி, சுமார் 1 கிமீ தூரம் வரை கையால் தள்ளிச் சென்றனர்.

பின்னர் பெட்ரோல் பங்க்கில் ரூ.500க்கு டீசல் போட்டும் ஆம்புலன்ஸ் ஓடவில்லை. வேறொரு ஆம்புலன்ஸ் வர ஒரு மணி நேரம் ஆன நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை இல்லாததால், ஆம்புலன்சிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: