×

கறிவேப்பிலை ஈரல் பொரியல்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் பொடியாக‌ நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு பிரட்டவும். தக்காளி குறைவாக‌ சேர்த்தால் தான் இந்த பொரியல் நன்றாக‌ இருக்கும். தக்காளி நன்கு வதங்கியதும் தனி மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தேவையான‌ அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.

அதனுடன் நன்கு சுத்தம் செய்த‌ ஈரலை சேர்த்து ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நன்கு பிரட்ட‌வும். இதை மூடி போட்டு நன்கு வேக‌ விடவும். 2 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து அடி பிடிக்காமல் கிளறி விடவும். ஈரல் நன்கு வெந்த‌ பின் ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான‌ கறிவேப்பிலை ஈரல் பொரியல் தயார். தக்காளி குறைவாக‌ சேர்க்கவும். அதிகமானால் சுவை மாறிவிடும். கறிவேப்பிலையை அதிகம் வேக விட வேண்டாம். லேசாக‌ சூடேறினாலே நன்கு வெந்து மொறுமொறுப்பான சுவையுடன் இருக்கும்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்