பெருங்குடி ஜெம் மருத்துவமனை சார்பில் உடல் பருமன், சர்க்கரை நோய் கருத்தரங்கு

துரைப்பாக்கம்: பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனை சார்பில், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பற்றிய கருத்தரங்கு மாநாடு நடந்தது. சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் ஒபிசிகான் ரிவர்சிங் டயாபெசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பற்றிய கருத்தரங்கு மாநாடு நேற்று நடந்தது. ஜெம் மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய இஎன்டி சங்க முன்னாள் தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் கே.கே.ராமலிங்கம் கலந்துகொண்டு கருத்தரங்கு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், மருத்துவர் பிரவீன்ராஜ் பேசுகையில், ‘பருமன் மற்றும் சர்க்கரை நோயானது குணப்படுத்தக் கூடிய ஒன்று.

ஆனால் மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. உடற்பயிற்சி, உணவுமுறை தொடங்கி ஒபிசிகான் ரிவர்சிங் டயாபெசிட்டி என முறையான சிகிச்சை தேவை என்பதை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக, ஜெம் மருத்துவமனை மருத்துவ வல்லுநர்கள் ஒருங்கிணைந்து கருத்தரங்கு மாநாடு நடந்தது’ என்றார். கருத்தரங்கில், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேல், நிர்வாக இயக்குனர் அசோகன், அறுவை  சிகிச்சை துறையின் இயக்குநர் மற்றும் தலைவர் பிரவீன் ராஜ், சிறப்பு  மருத்துவர் ஜெயந்த், உணவியல் நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள் உள்ளிட்ட  மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: