சொல்லிட்டாங்க...

அரசியலமைப்பை புறக்கணித்து தவறாக பயன்படுத்துபவர்கள், இன்று அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் வித்தையில் ஈடுபட்டுள்ளனர். - காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

ஒவ்வொருவரும் அவரவர் அடிப்படை கடமையை செவ்வனே நிறைவேற்றினால், நாடு புதிய உயரங்களை அடைய முடியும். - பிரதமர் மோடி

70 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட சட்டத்தில், காலத்திற்கு ஏற்ற வகையில் சில திருத்தங்கள் செய்திருந்தாலும், அது மூல சட்டத்திற்கு எதிராக இருக்காது. - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜ போட்டி அரசாங்கம் நடத்த நினைப்பது ஜனநாயக விரோதப்போக்கு. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Related Stories: