சமூக வலைதளங்களில் துப்பாக்கி கலாசார பதிவை நீக்க கெடு: பஞ்சாப் அரசு அதிரடி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பொது இடங்களில் துப்பாக்கிகளை காட்சிப்படுத்தவும், துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களை சமூக வலைதளத்தில் பதிவிடவும் கடந்த 13ம் தேதி அம்மாநில அரசு தடை செய்தது.  இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அடுத்த 72 மணி நேரத்தில் சமூக வலைதளங்களில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பதிவிட்டுள்ள பதிவுகளை தானாக முன்வந்து நீக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். அடுத்த 3 நாட்களில் பதிவுகளை நீக்கிவிட்டால் அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார்.

Related Stories: