மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க நவ.28ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை சிறப்பு முகாம்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின்வாரிய அலுவலகங்களில் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. டிசம்பர் 31ம் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமம் இன்றி ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி செலுத்தலாம். ஆதாரை இணைப்பதினால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: