புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. துணைவேந்தர் நியமன வழக்கில் புதுவை அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. துணைவேந்தர் எஸ்.மோகன் நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரிய வழக்கில் புதுச்சேரி அரசு, பல்கலைக்கழகம் தரப்பில் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழு, தேர்வுக்குழு ஆகியவை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு மோகன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை. ஓய்வூதியர்கள் நலச் சங்க பொது செயலாளர் வி.பழனியப்பா தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: