வேலியே பயிரை மேய்ந்த கதை; 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் 2 தாத்தா கைது

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அடுத்த நல்லூர் திருப்பதி நகர் பகுதியை சேர்ந்தவர் துர்கா (6, பெயர் மாற்றம்) இவரது பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுக்கு முன் பிரிந்து, வேறு திருமணம் செய்து கொண்டனர். இதனால் தாத்தா ராஜேந்திரனின் (60) பராமரிப்பில் துர்கா வளர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவர், 6 வயது சிறுமிக்கு 2 முதியவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் புகார் தெரிவித்தார்.

அதன்படி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுடன் சம்பவ இடத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர். சிறுமியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர். இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாத்தா ராஜேந்திரனிடம் விசாரித்தபோது, அவரும், அவரது சகோதரருமான தேவராஜும் சிறுமிக்கு பாலியல் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், தேவராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வேலியே பயிரை மேய்த கதையாக நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: