பிளஸ் 1 மாணவி கர்ப்பம்: பாலிடெக் மாணவன் கைது

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி மதுரா பைரவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா(19). இவர்  பாலிடெக்னிக் கல்லூரில் 3ம் ஆண்டு படிக்கிறார். இருவரும் ஐயங்குளம் கூட்ரோட்டில் இருந்து பஸ்சில் பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். அப்போது மாணவிக்கும், பிரசன்னாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரசன்னா அடிக்கடி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச்செல்வாராம்.

அப்போது நைசாக பேசி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் மாணவியை, பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் பிரசன்னா என்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை நேற்று கைது செய்தனர்.

Related Stories: