இளம்பெண் செல்போனுக்கு நிர்வாண படம்: போலி சாமியார் கைது

அரூர்: அரூர் அருகே இளம்பெண் செல்போனுக்கு நிர்வாண படம் அனுப்பிய போலி சாமியார் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளுவபுரத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது வீட்டிற்கு கடந்த 19ம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எருக்கம்பட்டுவை சேர்ந்த போலி சாமியார் சின்னதுரை (40) என்பவர் வந்துள்ளார். அப்போது, வீட்டின் பின்புறம் செய்வினை உள்ளதாகவும், அதை நீக்க பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, பூஜை பொருட்கள் வாங்க சின்னதுரையை அழைத்துக்கொண்டு மனோகரன் அரூர் வந்த போது, போலீசில் பிடித்து கொடுத்து விடுவார் என்ற பயத்தில் டூவீலரில் இருந்து சின்னதுரை குதித்து ஓடி விட்டார். தொடர்ந்து, சின்னதுரையை செல்போனில் தொடர்பு கொண்ட மனோகரன் ஏன் பூஜை செய்யாமல் சென்று விட்டீர்கள் என்று கேட்டபோது, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் மனோகரன் மகளின் செல்போனுக்கு ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை சின்னதுரை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் போலீசில் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை கைது செய்தனர்.

Related Stories: