×

மாநகர பஸ்களில் ஜிபிஎஸ் உதவியுடன் நிறுத்தங்களை அறிவிக்கும் வசதி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் உதவியுடன் நிறுத்தங்களை அறிவிக்கும் வசதியை அமைச்சர்கள் இன்று தொடங்கி வைத்தனர். சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் உதவியுடன் பேருந்து நிறுத்தங்களை அறிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கு அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் இந்த திட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது. பேருந்து நிறுத்தங்களை அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திற்கு முன், நிறுத்தங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்ய போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.

அதன்படி, பேருந்துகளின் உட்புறத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டு பகுதிகளில் தலா 2 என 6 ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் இந்த சேவையை தொடங்கி வைத்தனர். மேலும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகளின் இடையே விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு போக்குவரத்து கழகத்திற்கு அதன் மூலம் வருவாய் திரட்டப்படும் எனவும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : GPS assisted stop notification facility in city buses: Ministers launched
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்