பொன்னமராவதியில் மந்திரவாதி எனக்கூறி கொத்தனார், பெண்ணிடம் பணம், நகை மோசடி-ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு

பொன்னமராவதி : பொன்னமராவதி மந்திரவாதி (குடுகுடுப்பைக்காரர்) எனக்கூறி கொத்தனார் மற்றும் ஒரு பெண்ணிடம் மோசடி செய்த திண்டுக்கல் ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தில் உள்ள இடையப்பட்டியில் ஒரு வீட்டில் கட்டிடப்பணி நடந்துள்ளது. அதில் வேலை செய்த மணப்பட்டியைச் சேர்ந்த செல்வம் கொத்தனார் இவரிடம் மந்திரவாதி என்று சொல்லி ஒருவர் காவி வேட்டியுடன் உனக்கு ஆபத்து வரப்போகுது, அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் இல்லைஎன்றால்.... என பயமுறுத்தி குறி சொல்வது போல சொல்லியுள்ளார்.

இதில் பதறிப்போன செல்வம் இதற்கு என்ன செய்வது எனக் கேட்டுள்ளார். இதற்கு பரிகாரம் செய்ய ரூ.15ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். பின்னர் 10ஆயிரம், ரூ.5ஆயிரம் எனப்பேசி கடைசியில் ரூ.3ஆயிரம் தருவதாக கொத்தனார் சொல்லியுள்ளார். பணத்தை கூகுல்பேயில் போடச்சொல்லியுள்ளார். பணத்தை போட்டதும் ஒரு படத்தில் வடிவேல் செய்வது போல விபூதியை அள்ளி முகத்தில் போட்டுள்ளார்.

இதில் செல்வம் மயங்கினார். அவரது கையில் அணிந்திருந்த அரை பவுன் மோதிரத்தையும் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து அருகில் இருந்த ரெங்கசாமி மனைவி பொன்னழகி வீட்டிற்கு சென்று உன் வீட்டில் இருவர் கோயிலுக்கு மாலை போட்டு இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் ஆபத்து என சொல்லியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பொன்னழகி பரிகாரம் இருக்கா என கேட்டுள்ளார். அப்போது 15 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர். இறுதியாக அவர் ரூ,2.00கொடுத்துள்ளார். அப்போது வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அங்கு மக்கள் நலப்பணியாளர் பழனியப்பன் என்பவர் வந்துள்ளார். நடந்ததை அவரிடம் பொன்னழகி சொல்லி நீங்க போயிடாதீங்க பயமா இருங்க சொல்லியுள்ளார்.

இதனையடுத்து அந்த ஆசாமி அங்கிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அந்த நபரையும், வண்டியினையும் போட்டோ எடுத்து அப்பகுதியில் உள்ளவர்களின் வாட்ஸ்ப்பில் போட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு விரட்டி சுந்தரத்தை மெயின் ரோட்டில் மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து பொன்னமராவதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அந்த நபரை அழைத்துச் சென்றனர். விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரியவந்தது.

மேலும் அவரிடமிருந்து பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. குடுகுடுப்பை தொழில் செய்பவன் என்பதும், இவன் மட்டும் தான் வந்தானா அல்லது குரூப்பாக வந்துள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. பட்டப்பகலில் நூதன முறையில் ஏமாற்றும் நபர்களிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். இது போன்ற சந்தேகத்துடன் காணப்படும் நபர்களை காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்தவேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: