×

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு போதை, ஆபாச சேனல்கள் தடை கோரி மனித சங்கிலி போராட்டம்-பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

திருப்பதி : பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கும் போதைப்பொருள், ஆபாச சேனல்களை தடை செய்ய வேண்டும் என்று மகளிர் சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியு
ள்ளனர். திருப்பதியில் அகில இந்திய மகளிர் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை வன்முறைக்கு எதிரான போராட்டத்தை தொடங்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பதி பாலாஜி காலனியில் இருந்து என்டிஆர் சிலை வரை பள்ளி, கல்லூரி மாணவிகள் பேரணியாக சென்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.  
இதில், மகளிர் சங்க நிர்வாகிகள் பேசுகையில், ‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதை தடுக்க அரசு தவறி விட்டது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். நிலுவை வழக்குகளை விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரித்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்கு காரணமான மது, கஞ்சா, போதைப்பொருள் மற்றும் ஆபாச சேனல்களை அரசு தடை செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : Tirupati: Women's association says that drug and porn channels that increase violence against women should be banned
× RELATED தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது...