×

ரசாயன கழிவுகளை வெளியேற்றிய தனியார் இரும்பு ஆலை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது

ஈரோடு: ரசாயன கழிவுகளை வெளியேற்றிய தனியார் இரும்பு ஆலை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. பெருந்துறை சிப்காட் தொழில் மையத்தில் மழை நீருடன் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டதால் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.ரசாயன கழிவு வெளியேற்றப்படுவது தொடர்பாக நேற்று கோட்டாட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தனர். ஆய்வில் தனியார் இரும்பு உருக்காலையில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன.

200க்கும் மேற்பட்ட தொழிசாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து ஆலைக் கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றன எனதொடர் குற்றச்சாட்டு இருந்து வரக்கூடிய நிலையில் கடந்த வாரம் பெய்த மழையில் போது மழை வள்ளத்தை பயன்படுத்தி அதில் ரசாயன ஆலைக்கழிவுகள் வெளியேற்றப்பட்டதாக புகார் எழுந்தது. ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டதால் 4.5 ஏக்கர் பரப்பிலான செங்குளம் மற்றும் சுற்றி உள்ள விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன.
 
ஆய்வு நடத்தி ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் கிராம மக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். தற்போது ஆலை மூடப்பட்டது. அந்த ஆலையில் மின் இணைப்பு முதல் கட்டமாக துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கழிவுகளை எவ்வாறு அகற்றுவது குறித்து மாசு கட்டுபாட்டு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : District Collector , A private steel plant that discharged chemical waste was closed on the orders of the District Collector
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்