குழந்தை பாதுகாப்பு திட்ட நிதியுதவிக்கு லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது

பல்லடம்: பல்லடத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட நிதியுதவிக்கு லஞ்சம் வாங்கிய பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்  கைது செய்தனர். மதுரை மாவட்டம் திண்டுக்கல் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் பசும்பொன்தேவி (57) இவர், பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டாக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார்.  

பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பம் அளித்துள்ளார். அதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு பசும்பொன்தேவி கேட்டுள்ளார். செந்தில்குமார் ரூ.1500ஐ கூகுள்பே மூலம் பசும்பொன்தேவிக்கு அனுப்பியுள்ளார். மேலும், தொகை தர மனம் இன்றி திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் உத்தரவின்பேரில் பல்லடம் பஸ் நிலையத்தில் ரூ.1500ஐ பசும்பொன்தேவியிடம் செந்தில்குமார் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Related Stories: