×

அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளை முறியடிப்போம்: வைகோ உறுதி

சென்னை: அரசியலமைப்பு சட்டத்தைத் தகர்க்க நினைக்கும் ஒன்றிய பாஜ அரசின் முயற்சிகளை முறியடிப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் ேநற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசியல் சாசன தினமான நவம்பர் 26ம் நாள், இந்த ஆண்டு கல்லூரிகளில்  கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசியல் சட்ட நாளான நவம்பர் 26ம் நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து முறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துவதற்கு ஒன்றிய பாஜ அரசு, யு.ஜி.சி மூலம் அறிப்பை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசின் கடந்த 8 ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன.

எனவே, அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Union Government ,VICO , Constituent act, initiative of the Union Government, Vaiko confirmed
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...