சில்லி பாய்ன்ட்...

* விஜய் ஹசாரே  கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று அகமதாபாத்தில் நடக்கின்றன. அதில் ஜம்மு காஷ்மீர் - கேரளா, உத்தர பிரதேசம் - மும்பை, கர்நாடகா - ஜார்கண்ட்  அணிகள் மோதுகின்றன. நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ள தமிழகம் 28ம் தேதி சவுராஷ்டிராவை சந்திக்கிறது.

* ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜன.13 முதல் ஜன.29ம்தேதி வரை புவனேஸ்வர், ரூர்கேலா நகரங்களில் நடக்க உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிக்கான டிக்கெட்களை (ரூ.100 முதல் ரூ.500 வரை) https://insider.in/online என்ற இணையதளம் மூலமாக  வாங்கலாம். முன்னாள்  ஒலிம்பிக் வீரர்கள், முன்னாள் வீரர்கள் இலவச டிக்கெட் பெறவும் இதே இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

* இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் பிடே உலக குழு சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இந்த தொடரின் அரையிறுதியில்  இந்தியா - உஸ்பெஸ்கிஸ்தான் அணிகள் மோதின. அதில் உஸ்பெகிஸ்தான் 7.5 - 4.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் சீனா 8-4 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்பெயின் குழுவை வீழ்த்தியது. பைனலில் சீனா - உஸ்பெஸ்கிஸ்தான், 3வது இடத்துக்கு இந்தியா - ஸ்பெயின் மோத உள்ளன.

* ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. எஞ்சிய ஆட்டங்கள் நவ.27, 30, டிச.3, 4 தேதிகளில் நடைபெறும்.

Related Stories: