நேபாள ஆளும் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி: ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு

காத்மண்டு: நேபாள தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த 20ம் தேதி நாடாளுமன்றத்துக்கும், 7 மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் நாடாளுமன்றத்தில் உள்ள 275 இடங்களில் 165க்கு நேரடியாக தேர்தல் மூலமாகவும், மற்ற எம்பி.க்கள் விகிதாச்சார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதில், முடிவு அறிவிக்கப்பட்ட 118 தொகுதிகளில் 64 இடங்களை கைப்பற்றி ஆளும் நேபாள காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன் கூட்டணி கட்சிகளான சிபிஎன் (மாவோயிஸ்ட்), சிபிஎன் (சோசலிஸ்ட்) கட்சி, லோக்தந்திரிக் சமாஜ்வாடி கட்சிகள் 25 தொகுதிகளில் வென்றுள்ளன. கே.பி. சர்மா ஒலி தலைமையிலான சிபிஎன் (யுஎம்எல்) கட்சி 29 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகள் 6 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. இதனால் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளும் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்று வருகிறது.

Related Stories: