×

முட்டை ஆம்லெட் குழம்பு

செய்முறை

முட்டையை உடைத்து அதில் சிறிது உப்பு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி , முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் செய்ய வேண்டும்.  கலக்கி வைத்துள்ள முட்டை கலவை  முழுவதையும் ஆம்லெட் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். மிளகாய் , சீரகம்  தேங்காய் துருவலை அரைத்து கொள்ளவும் . பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்  கறிவேப்பிலை போட்டு வதக்கவும் .அதன்பின் அரைத்த மசாலாவை போட்டு நன்றாக வதக்கி சிறிது தண்ணீர், மஞ்சள் தூள் , உப்பு சேர்க்கவும். குழம்பு கெட்டியானதும் ஆம்லெட் துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலையை  போட்டு இறக்கவும்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்