புதினா ஓமப் பொடி

செய்முறை:

புதினா இலைகளாக எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் புதினா, பச்சைமிளகாய், ஓமம், தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், அரைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்து கொள்ளவும். முறுக்குப் பிழியும் கட்டையில் ஓமப் பொடி அச்சைப் போட்டு பிசைந்த மாவை வைத்து ஓமப் பொடியாக சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும். மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். இல்லை என்றால் ஓமப் பொடி கருகி விடும். ஆறியவுடன் நொறுக்கி காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

குறிப்பு: அரைத்த விழுதை அப்படியே மாவில் பிசைந்தால் அது ஓமப்பொடி அச்சில் மாட்டிக் கொண்டு பிழிய வராது. அதனால் அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ளவும். ஓமம் சேர்க்காமல் வெறும் புதினா மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

Related Stories: