ஐந்து உலகக்கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரிஸ்டியானோ ரொனால்டோ!

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் போர்ச்சுகல் அணியும்,   கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது. இந்த போட்டியில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்ததன் மூலம் 5 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ.

குரூப் H பிரிவில் நடைபெற்ற போட்டியில் ரொனால்டோவின் தலைமையிலனான போர்ச்சுகல் அணி கானா அணியுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 2வது பாதியில் 65வது நிமிடத்தின் போது ரொனால்டோவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இந்த பெனால்டி வாய்ப்பை கிரிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்றினார். இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் முன்னிலை பெற்றது. பின்னர் 73வது நிமிடத்தில் கானா அணி கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது.

இந்நிலையில் போர்ச்சுகல் அணியினர், பெலிக்ஸ் 78வது நிமிடத்திலும், ரபேல் 80வது நிமிடத்திலும் கோல்களை அடித்ததால் போர்ச்சுகல் அணி 3-1 என முன்னிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் இறுதி கட்டமான 89வது நிமிடத்தில் கானா வீரர் புகாரி கோல் அடித்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்த 37 வயதான கிரிஸ்டியானோ ரொனால்டோ 2006, 2010, 2014, 2022 ஆகிய 5 உலகக்கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Related Stories: