ஆதாரமற்ற அவதூறுகள் கூறுவதை தமிழக ஆளுநர் நிறுத்தி கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: ஆதாரமற்ற அவதூறுகள் கூறுவதை ஆர்.என்.ரவி நிறுத்தி கொள்ள வேண்டும் என் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாதுகாப்புத்துறையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். நேருவின் தலைமையில் 17 ஆண்டுகளில் இந்திய ராணுவ படைவீரர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்திலிருந்து 50 லட்சத்து 50 ஆயிரமாக விரிவடைந்தது. கடற்படை, விமானப்படைகளுக்கு இக்கால கட்டத்தில் தான் வலு சேர்க்கப்பட்டது. இத்தகைய வலுவான கட்டமைப்புகளை பாதுகாப்புத்துறையில் ஏற்படுத்தியவர் பண்டித நேரு. எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவி, பண்டித நேருவை பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இத்தகைய அவதூறு பேச்சுகளை தொடருவாரேயானால் அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: