×

தாமரை விதை கீர்

செய்முறை:

ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி அதில் தாமரை விதைகளைப் போட்டு வறுக்கவும். அடுப்பை குறைத்து வைத்து மிதமான தீயில் தாமரை விதை மொறு மொறுப்பாகும் வரை, அதாவது 5 நிமிடம் வறுக்கவும். கையில் எடுத்து அழுத்திப் பார்த்தால் உடைய வேண்டும். அது வரை வறுக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றில் சிறிது அலங்கரிக்க எடுத்துக் கொண்டு மீதியுள்ளவற்றை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, பொடித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பொடி, ஏலக்காய் பொடி, ஜாதிப்பூ, ஜாதிக்காய்ப் பொடி சேர்த்து நன்றாக காய்ச்சவும். பின் வறுத்து வைத்துள்ள தாமரை விதையை (மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கலாம்) சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்தவுடன் குங்குமப்பூ மற்றும் பருப்புகளை மேலே தூவி அலங்கரித்து சூடாகவோ அல்லது குளிர்வித்து பரிமாறவும். திக்காக வேண்டுமென்றால் கன்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம்.

குறிப்பு: தாமரை விதை சத்துக்கள் நிறைந்தது. வட மாநிலங்களில் நவராத்திரி மற்றும் தீபாவளியன்று இந்த கீர் செய்து சாப்பிடுவார்கள்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!